அதிகளவு மகசூல் பெற நிலக்கடலையில் விதை நேர்த்தி அவசியம்

சிவகங்கை, நவ.28: நிலக்கடலை ரகங்களை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை விதை சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி பட்டத்தில் இறவை கடலை சாகுபடி செய்யப்படுகிறது. திண்டிவனம், விருத்தாசலம் ரகங்கள் தொடர்ந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களாக தரணி ரகம் சீரான மகசூலுடன் மானாவாரி சாகுபடி விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கதிரி லப்பாக்சி என்ற புதிய ரகம் காளையார்கோவில், சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி வட்டாரங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. எந்த ரகம் பயிரிட்டாலும் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கொடர்மா விரிடி விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இதனால் வேரழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட ரகங்களின் கடலையில் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி விதை அலுவலரை அணுகலாம்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது