அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே கன்டெய்னர் லாரிகள் நின்றதால் பரபரப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி அருகே 3 கன்டெய்னர் லாரிகள் சுமார் 1 மணிநேரம் நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர்,  காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் 3 கன்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்தின் முன் வந்து நின்றன. நீண்ட நேரமாக இந்த லாரிகள் அங்கு நின்றதால், சந்தேகமடைந்த ஆலந்தூர் தொகுதி திமுக தேர்தல் பணி முகவர்கள் ஜனார்த்தனன், நவீன்குமார் ஆகியோர் உடனே அந்த லாரிகளை அங்கிருந்து எடுக்கும்படி சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து 2 லாரிகள் புறப்பட்டு சென்றன. ஆனால் ஒரு கன்டெய்னர் லாரி மட்டும் செல்லாததால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, போலீசார் கன்டெய்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனிடையே திமுகவினர் அங்கு திரண்டு கன்டெய்னர் லாரியை அங்கிருந்து வெளியேற்றும்படி கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை