அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: தள்ளிவைக்கப்பட்ட மற்றும் அரியர் தேர்வுகள் மே 17ம் தேதி தொடங்கும்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளுக்கான மறு தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக்  கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய பருவத்தேர்வுகள் கொரோனா காரணமாக கடந்த பிப்ரவரி – மார்ச்சில் நடத்தப்பட்டது.ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்னைகள் காரணமாக மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா  பல்கலைக்கழகம் முடிவு செய்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த  ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகியவையும் மே 17ம் தேதி முதல் தொடங்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு  அட்டவணை பொருந்தும் என்றும் மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு