அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பணி தீவிரம்: புதிய துணை கமிஷனர் அதிரடி

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதிய  துணை கமிஷனர் கூறினார். சென்னை அண்ணாநகர் போலீஸ் மாவட்டம் அண்ணா நகர், கொளத்தூர் என இரண்டு காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாநகர் துணை கமிஷனராக விஜயகுமார் 2 நாளைக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குற்றசம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார். குறிப்பாக ரவுடிகளின் பட்டியல் தயார் செய்து சிறையில் உள்ளவர்கள், வெளியே வந்தவர்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து வருகின்றனர்.மேலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களை தடுக்கவும் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் ந நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. துணை ஆணையர் விஜயகுமார் கூறுகையில், ‘’அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் ஆன்லைனில் பண மோசடி கும்பல் மொபைல் எண்ணிற்கு பல லட்சம் பரிசு விழுந்ததாக கூறி வங்கிக் கணக்கு கொடுங்கள் என்றும் ஓடிபி நம்பரை சொல்லுங்கள் என கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பலை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 700 செல்போன்கள் மற்றும் இரண்டு கோடி பணத்தை புகார் தாரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதுபோல் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் அட்டகாசம், குழந்தைகள், பெண்களுக்கு  நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களிலும் துணை கமிஷனர் அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம்’ என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை