அண்ணாமலை 4 நாள் பிரசாரம்

சென்னை: தமிழக பாஜ வெளியிட்ட அறிவிப்பு: பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று முதல் 9ம் தேதி வரை முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 7ம் தேதிகாலை 10 மணி கோவை மாநகராட்சி, காலை 11.30 திருப்பூர் மாநகராட்சி, பகல் 12 மணி ஈரோடு மாநகராட்சி, மாலை 5 மணி சேலம் மாநகராட்சி. 8ம் தேதி காலை 10 மணி நாகர்கோவில் மாநகராட்சி, பகல் 2 மணி திருச்செந்தூர் நகராட்சி, மாலை 4 மணி தூத்துக்கு மாநகராட்சி, மாலை 6 மணி திருநெல்வேலி மாநகராட்சியில் பிரசாரம் செய்கிறார். 9ம் தேதி காலை 10 மணி கோவில்பட்டி நகராட்சி, பிற்பகல் 12.30 மணி சிவகாசி மாநகராட்சி, பிற்பகல் 3.30 மணி விருதுநகர் நகராட்சி, மாலை 5 மணி மதுரையிலும் பிரசாரம் செய்கிறார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்