அண்ணாமலையை வரவேற்று பேனர் வைத்தவர் மீது வழக்கு

சேலம், ஜன.6: சேலம் மாவட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையை கடந்த 3 நாட்களாக நடத்தினார். இதனால் அவரை வரவேற்று பல இடங்களில் கட்சி நிர்வாகிகள், பேனர்களை வைத்துள்ளனர். இதில், சேலம் மாநகர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் உரிய அனுமதி ஏதும் இன்றி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று நேற்று முன்தினம் பேனர் வைக்கப்பட்டது. இதனை ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி எஸ்ஐ வெற்றிச்செல்வன் பார்த்தார். அந்த பேனரை வைத்த மணியனூர் பொடாரன்காடு சக்திநகரை சேர்ந்த பாஜ பிரமுகர் தியாகராஜன் (49) மீது உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்