அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, மே 13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.கர்நாடாக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 10ம் தேதி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் நேரடியாக மோதும் நிலையில், காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று திருவண்ணாமலை அண்ணாமைலயார் கோயிலில் அவரது மனைவி உஷாசிவக்குமாருடன் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்த டி.கே.சிவக்குமாருக்கு, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அவருடன், திமுக மாநில மருந்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உடன் வந்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், ‘கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்திருப்பதால், அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். எனக்கு பிடித்த கடவுள் சிவபெருமான். எனவே, அவரது ஆசியை பெற வந்தேன்’ என கூறினார். மேலும், தேர்தல் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். முன்னதாக, பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த டி.கே.சிவக்குமார், அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ெஹலிகாப்டரில் தரையிறங்கினார். அவருக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு