அண்ணாமலைநகருக்கு அம்பேத்கர் பணியிடமாற்றம் விழுப்புரம் காவல் சரகத்தில் 35 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் காவல் சரகத்தில் 35 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து டிஐஜி திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையம் வள்ளி, நெய்வேலி மகளிர் காவல்நிலையத்திற்கும். விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையம் வனஜா, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் குற்ற ஆவண காப்பகம் துர்கா, கடலூர் குற்றப்பிரிவுக்கும். விழுப்புரம் ஐஎஸ்டிசி கவிதா, கடலூர் சைபர்கிரைமுக்கும், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு அமுதா, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மனித உரிமைகள் பிரிவு தீபா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் நகர காவல்நிலையம் உதயகுமார் வடலூருக்கும், மேற்கு காவல்நிலையம் ரேவதி, சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் சைபர்கிரைம் சங்கீதா பண்ருட்டி மதுவிலக்குபிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு மகளிர்காவல்நிலையம் முத்துலட்சுமி கோட்டகுப்பம் மகளிர்காவல்நிலையத்திற்கும், கடலூர் குற்றபிரிவு மரியசோபிமஞ்சுளா விழுப்புரம் மகளிர்காவல்நிலையத்திற்கும், கடலூர் மதுவிலக்குபிரிவு பிரியா விழுப்புரம் சைபர் காவல் நிலையத்திற்கும், கடலூர் மகளிர் காவல் நிலையம் ராதிகா, விழுப்புரம் ஐஎஸ்டிசி பிரிவுக்கும், அண்ணாமலைநகர் கல்பனா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், நெய்வேலி மகளிர் காவல்நிலையம் சுமதி, திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், காட்டுமன்னார்கோயில் எழிலரசி சின்னசேலத்திற்கும், கடலூர் சைபர்கிரைம் புவனேஸ்வரி, கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவுக்கும், திட்டக்குடி மகளிர் காவல் நிலையம் தமிழ்செல்வி, திருக்கோவிலூருக்கும் மதுவிலக்குபிரிவுக்கும், பண்ருட்டி பாலகிருஷ்ணன் திருக்கோயிலுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அம்பேத்கர் அண்ணாமலைநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் கீதா விழுப்புரம் ஐயூசிஏடபில்யூ பிரிவுக்கும், திருப்பாதிரிப்புலியூர் கலைசெல்வி திட்டக்குடி மகளிர் காவல் நிலையத்திற்கும், குமராட்சி ரவிச்சந்திரன் நெல்லிக்குப்பத்திற்கும், குறிஞ்சிப்பாடி வீரசேகரன், முஷ்ணத்திற்கும், விருத்தாசலம் மதுவிலக்குபிரிவு தெய்வசிகாமணி ராமநத்தத்துக்கும், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இளவழகி மந்தாரகுப்பத்திற்கும், அங்கிருந்த சந்திரன் திருப்பாதிரிபுலியூருக்கும், குள்ளஞ்சாவடி அசோகன் புதுபேட்டைக்கும், கடலூர் முதுநகர் குருமூர்த்தி குள்ளஞ்சாவடிக்கும், கடலூர் போக்குவரத்து காவல்நிலையம் முத்துகுமரன் உளுந்தூர்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் ராஜதாமரைபாண்டியன் குறிஞ்சிப்பாடிக்கும், திருக்கோவிலூர் பாலாஜி கடலூர் மதுவிலக்குபிரிவுக்கும், உளுந்தூர்பேட்டை போக்குவரத்துகாவல்நிலையம் அருள்செல்வன் கடலூருக்கும் என 35 பேர் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்