அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்: குடிநீர் வாரியம் நடவடிக்கை

 

அண்ணா நகர்: சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, டி.பி.சத்திரம், திருமங்கலம் ஆகிய பகுதியில் அண்ணாநகர் மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் குடிநீர் வாரிய ஊழியர்கள், கால்வாய்களை தூர்வாரும் பணியை தீவிரம் படுத்தி வருகின்றனர்.

அதேபோல், குழாயில் குடிநீர் சுத்தமாக வருகிறதா, குடிநீர் தட்டுபாடு இல்லாமல் வருகிறதா என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டறிந்து வருகின்றனர். குறைகள் இருந்தால் அந்த குறைகளை உடனடியாக ஊழியர்களை வைத்து சரி செய்து வருகின்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ‘‘அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், டி.பி.சத்திரம் ஆகிய பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தினமும் நடைபெற்று வருகிறன.

அனைத்து பகுதிகளிலும் உள்ள குழாயில் சுத்தமான தண்ணீர் வருகிறதா என்று தினமும் ஆய்வு செய்து வருகிறோம். ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பையை அகற்றுதல், கால்வாய்களை சரி செய்வது, தூர்வாருவது போன்ற பணிகள் நடக்கிறது. பருவ மழையை முன்னிட்டு வீட்டின் அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறினால் உடனடியாக குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு தெரியபடுத்தவும். பொதுமக்கள் புகார் கொடுத்து ஊழியர்கள் பணி செய்யவில்லை என்றால் என்னிடம் புகார் கொடுக்கலாம்,’’ என்றார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை