அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி

 

சத்தியமங்கலம்,ஜன.5: பவானிசாகர் வட்டாரம் பனையம்பள்ளி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா நிலக்கடலை சாகுபடியில் உயர் விளைச்சல் தரும் இரகங்கள் சாகுபடி செய்தல் மற்றும் நிலக்கடலை சாகுபடி அதிகரிப்பது குறித்தும், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் சத்தியசீலன் நிலக்கடலை பயிரில் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும்,

வேளாண்மை அலுவலர் ஜெயசந்திரன் நிலக்கடலை பயிரில் தாக்கும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினர். உதவி தோட்டக்கலை அலுவலர் கௌரிசங்கர்தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார். இப்பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வள்ளி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கருணாம்பிகை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அன்புராஜ், மீரா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை