அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

திருச்சி, ஜூன் 6: திருச்சி பொன்மலை ரயில் நிலைய தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே எஸ்.எஸ்.ஐ பாலமுருகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவரின் அடையாளம் சுமாா்60 வயது மதிக்கதக்கவர், உயரம்:155 செ.மீ, இடது மார்பின் மேல் மச்சம் உள்ளது, வௌ்ளை நிற பச்சை அரைக்கை சட்டை, நீல நிற கைலி, மஞ்சள் நிற துண்டு அணிந்துள்ளார், மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால் இருப்புப்பாதை காவல் நிலைய எண்ணிற்கு 9942522477 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு