அடையாறு ஆற்றில் மணல் திருட்டு: 2 பேர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அடையாறு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை, போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றங்கரையோரத்தில், சிலர் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் திருட்டில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில், சம்பவ இடத்துக்கு சென்றபோது, பொக்லைன் இயந்திரம் மூலம், ஆற்றில் இருந்து மணலை எடுத்து லாரிகளில் ஏற்றுவது தெரிந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார், அங்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த எழில்வாணன் (36), சிக்கராயபுரத்தை சேர்ந்த கண்ணன் (35) என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், மணல் திருட்டுக்கு அவர்கள் பயன்படுத்திய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது