அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி : அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு அறிவுறுத்தியது. அதன்படி, பரிசோதித்ததில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை அடுத்த வாரம் முதல்  கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும் தங்களின் உடல்நிலை குறித்து தாங்களே சான்றளிக்கும் ஏர் சுவிதா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பது கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து