அடுத்த மாதம் 6ம் தேதி இந்தியா – ரஷ்யா இடையே முதல் 2+2 பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் 2 + 2 பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 6ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையே 2 + 2 என அழைக்கப்படுகிறது. இதன்படி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே 2 + 2 பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் கட்ட 2 +2 பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.இது குறித்து ரஷ்ய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தியாவுக்கு வரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் 2 + 2 பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆப்கானிஸ்தான், சிரியாவின் தற்போதைய நிலை உள்பட இந்தோ-பசிபிக், சர்வதேச பிரச்னைகள் பற்றியும் விரிவாக விவாதிக்க இருக்கின்றனர்,’’ என்றார். இந்நிலையில், இந்தியா – ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிறார்….

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

மகாராஜா, கொட்டுக்காளி உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!!

தென் மேற்கு பருவமழை விடைபெற்றது