அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும், அடுத்த  ஆண்டு முதல் விவசாயிகளுக்கு, 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை  அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட  மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும்  கருத்துக்கள்  குறித்து விவாதிக்க நேற்று  சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம்  கூறியதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணிகள்  நிறைவடைந்துள்ளன, 67,000 பேர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். எத்தனை மின் இணைப்புகள் பெற்றிறுந்தாலும் 100 யூனிட்  மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 4.5லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்கு  பதிவு செய்து காத்திருந்த சூழலில், ஒன்றறை ஆண்டுகளில் 1.5லட்சம் மின்  இணைப்புகளை விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் மின்நுகர்வு 18,000 மெகாவாட்டாக இருக்கும். இந்த 3 மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய  கணக்கிடப்பட்டு 1,562 மெகாவாட் மின்சாரம் இந்த 3 மாதங்களுக்கு மட்டும்  ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு யூனிட் ஒன்றிற்கு ரூ.8.50 விலை நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மின்  வாரியம் ரூ.1,312 கோடி சேமித்துள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரம்  வழங்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் அதற்காக 316 துணை மின்  நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 18 மணி நேரம்  மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு  முழுவதும் அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை  மின்சாரம் வழங்குவதற்கான பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி இந்தாண்டு பிப்ரவரியில் 20,307 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொழிற்சங்கங்கள் கொடுத்த பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.  எனவே, வரக்கூடிய ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்பட்டு தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு, ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். மின்வாரியம் ரூ.1,59,000 கோடி கடனிருந்தும் கூட 316 துணை மின் நிலையங்கள், புதிய மின் திட்டங்கள், டி.டி. மீட்டர்,  ஸ்மார்ட் மீட்டர்,  போன்ற வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைமுறை கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.   காலியாகவுள்ள பணியிடங்களின் தேவையை ஆராய்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்