அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 சவரன், ₹54 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை கண்ணமங்கலம் அருகே துணிகரம்

கண்ணமங்கலம், அக்.18: கண்ணமங்கலம் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 சவரன் நகைகள், ₹54 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா(50), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சேத்துப்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சரிதா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சரிதாவிற்கும், கண்ணமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சரிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த எட்டரை சவரன் நகைகள் மற்றும் ₹30 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை ேநாட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சரிதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த கீதாமஞ்சரி(37) என்பவரது வீட்டில் டிராயரில் வைத்திருந்த ₹24 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். மேலும், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வராமல் இருப்பதற்காக கீதா மஞ்சரியின் பக்கத்து வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டு போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்த 2 வீடுகளில் நடந்துள்ள திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்