அடுக்குமாடி குடியிருப்பில் 8 பைக்குகள் எரிந்து நாசம்

சென்னை: பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரிய 8 மாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள  97வது பிளாக்கில் வசிப்பவர்கள் தங்களது பைக்குகளை அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி நிறுத்துவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் பைக்குகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தினரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகிறார்கள். கடந்த  சில   ஆண்டுகளில் இந்த பகுதியில் 4 முறைக்கு மேல் இதேபோன்று பைக்குகள் எரிந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை