அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் அரையிறுதியில் இந்திய ஜோடி

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் இணை தகுதி பெற்றது. காலிறுதியில்  பெஞ்சமின் போன்ஸி (பிரான்ஸ்) – ஹியூகோ நைஸ் (மொனாகோ) இணையுடன்மோதிய இந்திய இணை அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினர். அரையிறுதியில் போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் பிரிகிச் – சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ) ஜோடியுடன் போபண்ணா – ராம்குமார் ஜோடி மோதுகிறது.சானியா ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா (இந்தியா) – நாடியா கிச்னோக் (உக்ரைன்) இணை 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி – ஸ்டோர்ம் சேண்டர்ஸ் ஜோடியிடம் போராடி தோற்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 5 நிமிடங்களுக்கு நீடித்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.), மிசாகி டோய் (ஜப்பான்), எலனா ரிபாகினா (கஜகஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்