அடிப்படை வசதி கோரி கரம்பை பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர்: அடிப்படை வசதி செய்து தரப் கோரி வண்ணாரப்பேட்டை ஊராட்சி கரம்பை பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட எட்டாம் நம்பர் கரம்பை பகுதி முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். குடியிருப்பு பகுதிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். இது சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை விண்ணப்பங்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு உடனடியாக சாலை வசதிகளும் குடிநீர் வசதிகளும் அமைத்துத் தருமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்