அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொட்டல்புதூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

கடையம்,ஏப்.28: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் அம்பை-தென்காசி சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்த சம்பவம் பொட்டல்புதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட பொட்டல்புதூர் ஊராட்சியில் முத்தன் தெரு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு வசதி இல்லாமல் நீண்டகாலமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டும் குழியுமான சாலையில் மூதாட்டி இசக்கியம்மாள் என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று அம்பை-தென்காசி சாலையில் மறியல் செய்ய திரண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், அன்னலட்சுமி மற்றும் ஊராட்சி தலைவர் கணேசன் ஆகியோர் மறியல் செய்ய வந்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர், ஊராட்சியில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கும் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை