அடிதடியாக மாறிய மனஉளைச்சல் டாக்டருக்கு நர்ஸ் பளார்

ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவனைகளில் படுக்கை, மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதை எல்லாம் சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குள் டாக்டர்கள், ஊழியர்களுக்கு உயிர் போய் வருகிறது. மிகப்பெரிய மன உளைச்சலில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்த மன உளைச்சல் ஒரு டாக்டருக்கும், இளம் நர்சுக்கும் அடிதடி நடக்கும் அளவுக்கு சென்று விட்டது. ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஒரு டாக்டருக்கும், நர்சுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. டாக்டர் தகாத வார்த்தைகளில் திட்டியதால் ஆத்திரம் அடைந்த நர்ஸ், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீறியதால், டாக்டரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். இதனால் கோபம் அடைந்த டாக்டரும், அந்த நர்சை திருப்பி கடுமையாக தாக்கினார். அவர்களை சக டாக்டர்கள் தடுத்தனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!