அடடா… அடடா… அடைமழைடா ஸ்ரீரங்கம் யானைகள் உற்சாக குளியல்: வீடியோ வைரல்

திருச்சி: திருச்சியில் நேற்று அதிகாலை முதல் காலை 11 மணி வரை சாரல் மழை பெய்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகியவை நேற்று பெய்த மழையில் ஆனந்த குளியல் போட்டன. 2 யானைகளும் குழந்தைகள் போல குதூகலத்துடன் மழையில் மகிழ்ச்சியாக குளித்தன. தும்பிக்கையால் நீரை உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று பீய்ச்சியடித்து மகிழ்ச்சியாக விளையாடின.  மழையென்றால் வழக்கமாக மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்ற எண்ணம் உள்ளது. ஆனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மழை மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை இந்த யானைகள் உணர்த்தியது. கொரோனா ஊரடங்கால் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோயில்கள் மூடியிருந்தன. நேற்று பாகன்கள் உதவியுடன் கோயில் வளாகம் முழுவதும் சுற்றி வந்த யானைகள் மழையை அனுபவித்தபடி மகிழ்ந்திருந்தன. இந்த வீடியோவை பாகன் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட அது வைரலாக பரவியது. யானைகளின் மழை குளியல் ரசிக்கும்படி இருந்தது. யானைகளை அடைத்தே வைத்திருக்காமல் இதுபோன்ற இயற்கை சீதோஷ்ண நிலைகளை அனுபவிக்க அனுமதிக்க வைக்க வேண்டும். இதனால் யானைகளின் மன நிலையில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்று யானை ஆர்வலர்கள் தெரிவித்தனர்….

Related posts

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு கமல்ஹாசன், ராகுல்காந்தி இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ