அடகு நகையை மீட்டு தராததால் தந்தையை வெட்டிகொன்ற மகள்

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே ஞானியார்குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி (63), விவசாயி. இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா (35)  உள்பட 6 மகள்கள் மற்றும் 4 மகன்கள். அமுதாவுக்கு திருமணமாகவில்லை. ஆறுமுகப்பாண்டி, மகள் அமுதாவின் ஒன்றே கால் பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து  தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அமுதா தோட்டத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டுள்ளார். வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்டுத் தருமாறு அமுதா, தந்தையிடம் அடிக்கடி கேட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமுதா, தந்தையின் மொபட் சாவியை எடுத்து வைத்துக் கொண்டு நகையை திருப்பி தந்து விட்டு சாவியை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். ஆனால்  மகளின் வார்த்தையை விளையாட்டாக கருதிய ஆறுமுகப்பாண்டி, மகளுக்கு தெரியாமல் மொபட் சாவியை எடுத்துச் சென்று விட்டார். பின்னர் தோட்டத்திற்கு திரும்பிய  தந்தை ஆறுமுகப் பாண்டியிடம் நகை தொடர்பாக கேட்டு அமுதா வாக்குவாதம் செய்தார். மேலும் ஆவேசத்தில் அமுதா, அரிவாளால் ஆறுமுகப்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார்.சாத்தான்குளம் போலீசார் அமுதாவை கைது  செய்தனர். …

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!