அஜித்துடன் அல்டிமேட் டிரிப்!

அடிக்கடி பைக், கார், விமானம் வரை அசால்ட்டாக ஓட்டுவதில் வல்லவர் நம் ‘வலிமை’ நாயகன் அஜித். தற்போது லடாக் பகுதியில் நடிகர் அஜித்குமார், நடிகை மஞ்சு வாரியர் மேலும் சில ரைடர்களுடன் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக் பயணங்களை சில சமயங்களில் ஓர் குழுவுடன் அஜித் மேற்கொள்வார். இந்த லடாக் பயணத்தையும் அவ்வாறுதான் அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா என்ற பைக் குழுவுடன் அஜித் தொடர்ந்துள்ளார். ஆனால் இம்முறை அஜித்குமாரின் பைக் பயணத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து கொண்டுள்ளார். இது குறித்து மஞ்சு வாரியர் ‘‘எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இருசக்கர வாகனப்பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்” என குறிப்பிட்டு பயணத்தின்போது நடிகர் அஜித் மற்றும் குழு உடன் எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்….

Related posts

பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!

பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்!