அசாமில் 1,183 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்; போலீஸ் விசாரணை

கவுகாத்தி: திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து லாரி ஒன்று அசாமின் கவுகாத்தி நகர் நோக்கி சென்றுள்ளது. அசாம் மற்றும் திரிபுரா எல்லையருகே வந்த அந்த லாரியை கரீம்நகர் மாவட்ட பகுதியில் வைத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நேற்றிரவு 11 மணியளவில் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த வாகனத்தில் 1,183 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து லாரியில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் லாரி ஓட்டுனர் ஆவார். அவர்கள் வசீம் (வயது 20) மற்றும் வாசிம் (வயது 18) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு