அசம்பாவிதங்களை தடுக்க 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: கலெக்டர் தகவல்

தாம்பரம்: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை முதல் கட்டத்தில் 66 சதவீத வாக்கு, 2வது கட்டத்தில் 75 சதவீத வாக்கு பதிவானது. மாவட்டம் முழுவதும் 8 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3500க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் பணியில்  ஈடுபடுவர். 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுவர். இதுமட்டுமின்றி, அனைத்து வாக்கு எண்ணும் அறையிலும் 747 சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்படும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்ததோ, அதைவிட ஒரு படி அதிக நடவடிக்கைமற்றும் ஏற்பாடுகளை இந்த வாக்கு எண்ணும் நாளில் செய்திருக்கிறோம்.குறிப்பாக ஒவ்வொரு கிராம வார்டு பஞ்சாயத்து உறுப்பினர்களில் இருந்து, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வரை 4 பதவிகளுக்கு அவர்களை கவுன்டிங் ஏஜென்ட்களுக்காக வெவ்வேறு நிறத்தில் அனுமதி சீட்டு வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி ஊடக துறையினருக்கும் தனி அடையாள சீட்டு வழங்கியுள்ளோம். போலீஸ் பாதுகாப்பை பொறுத்தவரை ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க இருக்கிறோம். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது