அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா

காவேரிப்பட்டணம், ஜன.6: காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஜெகதாப் கிராமத்தில், அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ பங்கேற்று, ₹20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சசிகலா தசரா, பள்ளியின் தலைமை ஆசிரியர் நந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கன்னியம்மாள் ராமமூர்த்தி, செந்தாமரை தமிழ் செல்வம், கோவிந்தராஜன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மாலினி, ராஜன், பாரி, ரங்கசாமி, மோகன், துரை பிரகாஷ், மாதேசன், சிங்காரம், திருப்பதி, மாது, பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்