அங்கன்வாடி மையம் அருகில் ஆபத்தான மரங்கள் அகற்றம்

 

பந்தலூர், ஜூலை 9: பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையத்தை சுற்றி ஆபத்தான மரங்கள் உள்ளன.

இந்நிலையில், காற்று மற்றும் கனமழை ஏற்பட்டால் மரங்கள் உடைந்து பாதிப்பு ஏற்படுத்தும். என தினகரன் பத்திரிக்கையில் செய்தி வந்தது. மேலும், அப்பகுதி கவுன்சிலர் வினோத்கண்ணா சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஆபத்தான மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை