அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்க விதைகள்: கலெக்டர் வழங்கினார்

தேனி, ஏப். 5: தேனி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்க விதைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் போஷன் பக்வாடா வாரத்தினையொட்டி மார்ச் 20ம் தேதி முதல் வருகிற நேற்றுமுன்தினம் வரை இருவார நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இருவார நிகழ்ச்சியின் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தாட்கோ பொது மேலாளர் சரளா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவின்போது, தோட்டக்கலைத் துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 20 அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இந்த அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை