அக்.15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

சென்னை: அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாகவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணியை பொறுத்தவரையில் 95 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் தற்போது 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. தேவையை அறிந்து மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்படும். சிந்தாதிரிபேட்டையில் 10,000 பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக்கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக உணவு கூடங்கள் அமைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். சேதமடைந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் மரங்களை கண்டறிந்து அகற்ற கூறியுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை