அக்னி தீர்த்த கடற்கரையில் மாணவர்கள் தூய்மை பணி

ராமேஸ்வரம்,செப்.25: உலக ஆறுகள் தினத்தையொட்டி நேற்று அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். உலக ஆறுகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜேஸ் துவக்கி வைத்தார். அக்னி தீர்த்த கடற்கரை,

சன்னதி தெரு பகுதிகளில் குப்பைகளை சேகரித்து தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ஜெயக்காந்தன், அலுவலர் செல்வக்குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி செய்தார்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு