அக்னிவீர் திட்டத்தில் விமான படையில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்,ஆக.10: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் பணிபுரிய விருப்பம் உள்ள திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் பணிபுரிய விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஆகஸ்ட் 17 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில், விண்ணப்பிப்பதற்கு பிறந்த தேதி 27.6.2003 முதல் 27.12.2006க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 044 – 27660250 மற்றும் 9080022088 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை