அக்காமலை புல்மலை பசுமைக்கு திரும்பியது

வால்பாறை: வால்பாறை அக்காமலை புல்மலை கடல் மட்டத்தில் இருந்து 6200அடி உயரத்தில் உள்ளது. தற்போது சாரல் மழை நிலவுவதால் புல்மலை பசுமை அடைந்து வருகிறது. மேலும் மழை நீரானது புல்வெளியில் சேகரிக்கப்பட்டு, சிறிது சிறிதாக வெளியிடுவதால் அப்பகுதியில் உள்ள அருவிகள் உயிர் பிடித்து உள்ளது. இதனால் சிற்றோடைகளுக்கு நீர்வரத்து உள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்காமலை புல் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் சாலைகளில் இருந்து பார்த்தால் அக்காமலை புல்மலை ரம்மியமாக காணப்படுகிறது….

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை