அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்துகொள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐயில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் கூடுதல் தொழிற் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பொற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற் சான்திறழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 2018ம் ஆண்டு வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழுமம் தொழிற் பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  உச்ச வயது வரம்பு இல்லை. தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 2019ம் ஆண்டு முதல் எஸ்சிவிடி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த தகுதியின் கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து என்டிசி பெறலாம். விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ.200ஐ www.karuvoolam.tn.gov.in  என்ற இணைய.தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் பாரத ஸ்டேட்வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோம் இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள் தனித்தேர்வர்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேசிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு