அகில இந்திய துணைத்தொழிற் தேர்வு 15ம்தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்

 

புதுக்கோட்டை, பிப்.11: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அகில இந்தியதுணை தொழிற்தேர்வு, மார்ச் 2024, கைவினைஞர்\ பயிற்சித்திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சிநிலையங்களை 15ம்தேதிக்குள் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அகில இந்திய துணைத்தொழிற் தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன்பெற< http://skilltraining.tn.gov.in/ > மற்றும் < http//ncvtmis.gov.in/ > ஆகிய இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?