அகில இந்திய ஒதுக்கீடு நிரப்பப்படாத மருத்துவ இடங்களை மாநில அரசுகளுக்கு தர மாட்டோம்; இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி

புதுடெல்லி: நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்)  மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத  இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை ஒன்றிய அரசே கவுன்சிலிங் நடத்தி நிரப்பி வந்தது. இதற்காக, 2 கட்ட கவுன்சிலிங்கை அது நடத்தியது. இவற்றில் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் மீதி இடங்களை, மீண்டும் மாநில அரசுகளிடயே ஒன்றிய அரசு ஒப்படைத்து விடும். மாநில அரசுகள் தங்களின் ஒதுக்கீட்டில் அவற்றுக்கு கவுன்சலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கும். இதுபோல், ஆண்டுதோறும் இந்த 2 பிரிவுகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள், தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில்,  இந்த கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறைகளை  அமல்படுத்தப் போவதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்படி, ‘மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தற்போது நடத்தப்படும் 2 கட்ட கவுன்சிலிங்கிற்கு பதிலாக, ஆண்டுக்கு 4 கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும். அவற்றில் மாநில அரசுகளால் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். இனிமேல், மிச்சமாகும் இடங்கள், மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படாது,’ என அது தெரிவித்துள்ளது….

Related posts

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?