அகரத்தில் போலீஸ், பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம்

 

ஏரல், அக்.7: ஏரல் அருகே அகரம் கிராமத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஏரல் எஸ்.ஐ முகம்மது ரபீக் தலைமை வகித்து போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து அவர், பொதுமக்கள் வாகனத்தில் கூட்டமாக இருக்கும் போது எப்படி பாதுகாப்பாக சென்றிட வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். மேலும் ஆன்லைன் மோசடி, போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், போதை பொருட்கள் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்