அகன்ற திரையில் ஒளிபரப்பு நிலவில் தரையிறங்கிய சந்திரயான் அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்

சிவகாசி, ஆக.24: சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு மாத பயணத்தைத் தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவர் சாதனமும் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்வை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு மகிழும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதில் சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கியதை கண்டு பள்ளி மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி அறிவியல் ஆசிரியர் கருணைதாஸ் கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை