அகதிகள் வருகையை கண்காணிக்க கோடியக்கரையில் ரோந்து படகு

வேதாரண்யம்: அகதிகள் வருகையை கண்காணிக்க கோடியக்கரையில் ரோந்து படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு நேற்று திடீர் வந்தது. கடலிலும், நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோந்து கப்பல், ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடும். எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தலை தடுக்கவும், எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்களை கண்காணிக்கவும் கப்பல் கோடியக்கரை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரோவர் கிராப்ட் கப்பலில் இருந்து பணிக்கு வந்த வீரர்களும், கடலோர காவல் படை வீரர்களும் ஆலோசனை நடத்தினர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கமான ரோந்து பணிக்காக மட்டுமே இந்த கப்பல் வந்துள்ளதாக தெரிவித்தனர்….

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்