வைகுண்டத்தில் காற்றுடன் மழை

வைகுண்டம், ஜூன் 25: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. பின்னர் மழை சற்று ஓய்வெடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்யத் துவங்கியுள்ளது.காலையில் வெயிலும், மாலையில் பரவலாக காற்றும் வீசி வந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் வைகுண்டத்தில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. கொட்டித் தீர்த்த மழை காரணமாக சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்து பொமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்