₹50 ஆயிரம் கடத்தல் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி, செப்.4: கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ₹50 ஆயிரம் மதிப்பிலான குட்காவை கடத்த முயன்ற வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், நேற்று முன்தினம் பெங்களூரு-கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள டோல்கேட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 201 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன.

அதன் மதிப்பு ₹50 ஆயிரம் ஆகும். இதையடுத்து, காருடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம், கோடிஜியை சேர்ந்த பிரகாஷ் பூரி(29) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை