₹4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், ஆக.23:ராசிபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட ஆர்.கவுண்டம்பாளையம் ஏல மையத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு புதுப்பாளையம், பட்டணம், காக்காவேரி, சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் சுரபி ரகம் குவிண்டால் குறைந்தபட்சமாக ₹7,619க்கும், அதிகபட்சமாக ₹8,445க்கும், ஆர்.சி.எச் ரகம் குறைந்தபட்சமாக ₹6,909க்கும், அதிகபட்சமாக ₹7,611க்கும், கொட்டு ரகம் ₹3,865 முதல் ₹4,219 வரை விற்பனையானது. ஆர்.சி.எச் 156 மூட்டைகளும், சுரபி ரகம் 25 மூட்டைகளும், கொட்டு ரகம் 6 மூட்டைகள் என மொத்தம் 187 மூட்டைகள் ₹4 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தியை ஏலம் எடுக்க கோவை, அவிநாசி, அன்னூர், சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி