₹4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், ஆக.27: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பருத்தி மூட்டைகளை கொண்டு வருகின்றனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 157 மூட்டை சுரபி ரகம் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ₹8,615க்கும், குறைந்தபட்சம் ₹7,600க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 157 மூட்டை பருத்தி, ₹4 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அலுவலர் தெரிவித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி