₹30.50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி

தேன்கனிக்கோட்டை: தண்டரை ஊராட்சியில் இஸ்லாம்பூர் கிராமத்தில் ₹30.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை ஊராட்சி இஸ்லாம்பூர் கிராமத்தில், ₹11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. அதே போல் 15வது நிதி மானிய திட்டத்தில் ₹9.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ₹10 லட்சம் மதிப்பில் கழிவு நீர்கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இப்பணிகளை தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தண்டரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, பாகஷ்உல்லா, உஸ்மான், நியமத்துல்லா, பாபு, மாதேவப்பா, வெங்கடேஷ்ரெட்டி, ஆரோக்கியசாமி, பிரம்மய்யா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அங்கன்வாடி கட்டித்திற்கு நிலம் தானம் வழங்கிய பகாஷ்உல்லாவிற்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை