₹22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், பிப்.10: கம்பைநல்லூர் வாரச்சந்தையில் நேற்று ₹22 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடுகளை விற்க சந்தைக்கு ஓட்டி வருகின்றனர். இந்த ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது. எடைக்கு தகுந்தார்போல் ஆடு ஒன்று ₹5,200 முதல் ₹10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக நேற்றைய சந்தையில் ₹22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை