₹2லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், பிப்.10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் 60 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோ ₹73.60 முதல் ₹85.60 வரையிலும், 2ம் தரம் ₹57.80 முதல் ₹70.80 என மொத்தம் ₹2லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 16ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை