ஹிஸ்புல் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் போஸ்க்ரீரீ பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனைதொடர்ந்து பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தனிஷ் பாத் மற்றும் கோகாப் தூரீ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் வீரர் சலீம் என்பவரது கொலை சம்பவத்திலும், மே 29ம் தேதி பொதுமக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடையவர்கள் என்று காஷ்மீரின் கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்….

Related posts

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்