ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு… குடியரசு தலைவர், பிரதமருக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் கடிதம்!!

டெல்லி : ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் 5 பேர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் தர்ம சன்சத் கூட்டத்தில் இந்து அமைப்பின் மாநாட்டில் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 26 பேர் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு கடிதம் எழுதினார். அதில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி 5 பேர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.அதில் இது போன்ற வெறுப்பு பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்றும் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். வெறுப்பு பேச்சு பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கையெழுத்திட்டு கடிதத்தை அனுப்பி உள்ளனர்.  …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு