ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. இதனால், பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திரையுலகினர் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறியுள்ளனர். இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இசை, நடனம், பாடல், நடிப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஸ்ருதிஹாசன், தற்போது டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’,பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றிய நிலையிலும் தனக்கு திடீரென்று தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிலிருந்து மீண்டு வர ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு