ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள  ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல், வேதியியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் “வேதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம்   நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். உயிர்வேதியல் துறைத்தலைவர் ப.புண்ணியக்கோட்டி வரவேற்றார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் ஏ.அரங்கநாதன்  முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஆலோசனை வழங்கினார். கல்லூரி தலைவர் கே.வீரராகவன், செயலாளர் வி.மோகனரங்கம், பொருளாளர் எம்.செந்தில்குமார் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ம.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக  பங்கேற்ற ஸ்ரீலுக் பெயிண்ட்ஸ் நிறுவனர் ஜி.எம்.சீனிவாசன் வேலைவாய்ப்பு பெறுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா காஞ்சிபுரம் மாவட்ட இளையோர் அலுவலர் ஏ.சரவணன்  செய்திருந்தார். இதில், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் காஞ்சனா, இ.பேபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்